ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் ஆகியோருக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்த்து.

sakshi-mallik WINP.V.SINDUtncm jj

7773PDIPR-P.NNO.116-HON_BLECM-GREETINGS...INDHUANDSAKSHIMALIK-DATE20.08.2016

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து மற்றும் சாக்சி மாலிக் ஆகியோருக்கு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பி.வி.சிந்து, சாக்சி மாலிக் ஆகியோருக்கு தமிழக மக்கள் சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் இருவரும் பேட்மிண்டன் மற்றும் பிரீஸ்டைல் மல்யுத்தப் போட்டிகளில் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை அவர்களை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள தடகளம் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இருவரும் உத்வேகம் அளித்துள்ளனர்.

குறிப்பாக, பெண்கள் சாதிக்க முடியும் என்பதற்கு அவர்கள் மிகச்சிறந்த உதாரணம். இந்தியா முழுவதிலும் உள்ள இளம்பெண்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கின்றனர். 

சிந்து மற்றும் சாக்சி ஆகியோரின் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வெற்றிக்கு பங்களிப்பை வழங்கிய மற்றவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார்.

 -ஆர்.அருண்கேசவன்.