இலங்கை அமைச்சர்கள் பயணித்த ஹெலிகாப்டரில் பழுது!- காய்கறித் தோட்டத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

SL NEWSவருமானம் குறைந்த 850 குடும்பங்களுக்கு வீடமைப்பு திட்டத்திற்கான 1100 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் காசோலைகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று நுவரெலியா சினிசிட்டா மண்டபத்திற்கு வருகை தந்த இலங்கை அமைச்சர்கள் நவீன் திசாநாயக்க, சஜீத் பிரேமதாச ஆகியோர் பயணித்த ஹெலிகாப்டரில் பழுது ஏற்பட்டதால், நுவரெலியவில் உள்ள காய்கறித் தோட்டத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் மிகப் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது.

-வினித்.