மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்துவிட்டதாக வேந்தர் மூவிஸ் மதன் மீது புகார்கள் குவிந்தன. இந்த புகாரின் அடிப்படையில் வேந்தர் மூவிஸ் மதன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மோசடி வழக்கில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் பெயரும் சேர்க்கப்பட்டது. இந்த மோசடி வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் வேந்தரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவருமான பச்சமுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். 25.08.2016 மாலை பச்சமுத்து விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.
சென்னை பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தீவிர விசாரணை மேற்கொண்டார். இரவிலும் அவரிடம் விசாரணை நீடித்தது. இதனைத் தொடர்ந்து இன்று அவர் கைது செய்யப்பட்டார்.
தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிய வேந்தர் மூவிஸ் மதனை கண்டு பிடித்தால்தான் இவ்வழக்கின் மர்மம் விலகும்.
-கே.பி.சுகுமார்.