Z தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியை உடனே தடைசெய்ய வேண்டும்!- அம்பலமாகும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் ரவுடித்தனம்!

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

Z தமிழ் தொலைக்காட்சியில் “சொல்வதெல்லாம் உண்மை” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடுவராக இருந்து, இரு தரப்பு பிரச்சினைகளுக்கும் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார். இந்த நிகழ்ச்சியால் குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படுகிறது என்று பல புகார்கள் வந்தது.

Z TAMIL

அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட நாகப்பன்.

அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட நாகப்பன்.

இப்போது இந்த நிகழ்ச்சியால் அவமானப்பட்ட சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த நாகப்பன் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்படும் நபர்களுக்கு தங்களின் குடும்பத்தின் அந்தரங்க கதைகளை இப்படி பொதுவெளியில் பகிர்ந்து கொள்வது சரியா? நாம் வீடியோ வடிவில் கொடுக்கும் வாக்கு மூலங்கள் பல தலைமுறைகளாக நமது சந்ததிகளை அவமானத்திற்குள்ளாக்குமே என்பது குறித்த எந்த தெளிவுமற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

பெரும்பாலும் கல்வியிலும், சமூக அந்தஸ்த்திலும் கீழ் நிலையில் இருக்கும் அப்பாவி மக்கள் இந்நிகழ்ச்சியில் சிக்கி சீரழிந்து வருகிறார்கள்.

எனவே, Z தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியை உடனே தடைசெய்ய வேண்டும். இல்லையென்றால், பல குடும்பங்களையும், பல உயிர்களையும் இந்நிகழ்ச்சி தொடர்ந்து பலி வாங்கிக் கொண்டே இருக்கும்.

மேலும், வணிக நோக்கத்தோடு இதுப்போன்ற நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பும் மற்ற சேனல்களையும் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடும்பத்தோடு சேர்ந்து சினிமா தியேட்டர்களுக்கு சென்று கூட படம் பார்த்து விடலாம். ஆனால், குடும்பத்தோடு அமர்ந்து தொலைக்காட்சிகளில் ஒரு நாடகத்தை பார்க்க முடியுமா?

அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் முதலாளிகளும், அதில் கூலிக்காக மாரடிக்கும் பணியாளர்களும் பணத்திற்காக எந்த பாதகத்தையும் துணிந்து செய்வதற்கு தயாராகவே இருக்கிறார்கள். எதை செய்தியாக்க வேண்டும், எதை செயலாக்க வேண்டும் என்ற தெளிவு ஊடகத்துறையினரிடம் கடுகளவும் இல்லை. “கவர் வாங்கிக் கொண்டு எழுதுவதுதான் கவர் ஸ்டோரி” என்று நாட்டு மக்களே நகைச் சுவையாக பேசத் தொடங்கி விட்டார்கள்.

இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், இந்தியாவில் உள்ள 90 சதவீத அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வதந்திகளை பரப்பி வருமானம் பார்ப்பதும்,  ஆபாசத்தை விற்று பிழைப்பு நடத்துவதும்தான் தங்களின் முழுநேரத் தொழிலாக செய்து வருகின்றனர். இவர்களிடம் ஒழுக்கத்தை ஒருபோதும் எதிர்ப்பார்க்க இயலாது.

தேடிச் சென்று சுமார் 3 மணி நேரம் தியேட்டர்களில் பார்க்கும் திரைப்படங்களுக்கு தணிக்கைக் குழு (Censor Board) இருக்கிறது. சான்றிதழ், U சான்றிதழ் என்றெல்லாம் தரம் பிரித்து வழங்கப்படுகிறது. ஆனால், 24 மணி நேரமும் ஒளிப்பரப்பப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், தொடர்களுக்கும், போலி விளம்பரங்களுக்கும் மற்றும் மருத்துவ ஆலோசனை என்ற பெயரில் ஒளிப்பரப்படும் ஆபாச நிகழ்ச்சிகளுக்கும் எந்த தணிக்கையும் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

எனவே, மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மக்கள் பிரதிநிதிகளை கூட்டி கலந்து ஆலோசித்து இதற்கான சட்டத்திருத்தத்தை மத்திய அரசு உடனே கொண்டு வரவேண்டும். அப்போதுதான் மக்கள் மகிழ்ச்சியும், நிம்மதியும் அடைவார்கள்.

 -டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com