ஏமாற்று விளம்பரங்களில் நடிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம், 5 ஆண்டு ஜெயில்!

MCW
மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் ஒரு வரைவு மசோதாவை உருவாக்கி உள்ளது. அந்த மசோதாவில், ஏமாற்று விளம்பரங்களை கட்டுப்படுத்தவும், அவற்றில் நடிக்கும் பிரபலங்களுக்கு பொறுப்புணர்வை உண்டாக்கவும் கடுமையான சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஏமாற்று விளம்பரங்களில் நடிப்பதன் மூலம், முதல்முறை தவறு செய்யும் பிரபலங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதமும், 2 ஆண்டுவரை ஜெயில் தண்டனையும் விதிக்கப்படும். இரண்டாவது தடவை தவறு செய்தால், ரூ.5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். கலப்படம் செய்பவர்களுக்கும் இதே ஜெயில் தண்டனை, அபராதத்துடன் உரிமமும் ரத்து செய்யப்படும். 
இந்த வரைவு மசோதா பற்றி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையிலான மந்திரிகள் குழு இன்று கூடி ஆலோசனை நடத்துகிறது.
-ஆர்.மார்ஷல்.