குஜராத் மாநிலத்தில் அஜி-3 அணையில் நீர்ப்பாசனத்துக்காக செயல்படுத்தப்பட்டுள்ள SAUNI என்ற திட்டத்தை துவங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோதி குஜராத் மாநிலம் ஜாம்நகர் சென்றார்.
நர்மதா நதியில் உள்ள சர்தார் சரோவர் அணையில் உள்ள வெள்ள நீர் மற்றும் உபரி நீரை வறட்சி பகுதியான சவுராஸ்டிரா பகுதியில் உள்ள 115 அணைகளுக்கு கால்வாய்கள் மற்றும் குழாய்கள் மூலமாக கொண்டு செல்லும் இந்த திட்டத்தின் முதலாவது அலகை பிரதமர் நரேந்திர மோதி துவங்கி வைத்தார்.
முதல் கட்டமாக 57 கி.மீட்டர் தொலைவுக்கு பைப்லைன் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இதன் மூலம் 3 மாவட்டங்களில் உள்ள 10 அணைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும். இந்த திட்டத்தை துவங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோதி அங்குள்ள விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார்.
-எஸ்.சதீஸ் சர்மா.