பூட்டப்பட்ட கழிப்பறை, மூடப்பட்ட குடிநீர் குழாய்! திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அவலம்!

B?????????? ?????????????????????????????? ??????????

திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு அருகே கழிப்பறை உள்ளது. அங்கு சிகிச்சைக்காகவும், சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட கட்டண கழிப்பறை ஆண், பெண் தனித்தனியே உள்ளது. ஆனால், அந்த கழிப்பறை பயன்படாத வகையில் பூட்டுப்போடப்பட்டுள்ளது.

மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என குறிப்பிட்டுள்ள இடத்தில், குடிநீர் குழாய் இணைப்பு இல்லை. தொட்டியில் குடிநீரும் இல்லை.

இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை சரி செய்வார்களா?

-எம்.ராம்ராஜ்.