விளை நிலங்களை, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக விற்பனை செய்யும்போது, பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள் எக்காரணம் கொண்டும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு.

Chennai high court

அங்கீகாரமில்லாத நிலத்தையோ அல்லது கட்டிடத்தையோ எக்காரணம் கொண்டும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று பத்திரப்பதிவுத் துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் யானை ராஜேந்திரன் 2015-ல் பொதுநல மனு (WP19566/2015) தாக்கல் செய்து இருந்தார்.

அதில், ‘சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனுமதி இன்றி விளைநிலங்கள் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் விளை நிலங்கள் குறைந்து, விவசாயமும் பாதித்துள்ளது. எனவே, விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும்என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி  சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.சிவஞானம் ஆகியோர் விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இதுக்குறித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் 03.07.2015 அன்று உத்தரவு பிறப்பித்தனர்.

list_new2_Pdf1 list_new2_Pdf2 list_new2_Pdf3 list_new2_Pdf4 list_new2_Pdf5 list_new2_Pdf6 list_new2_Pdf7

ஆனால், ரியல் எஸ்டேட் முதலாளிகள் திருந்தவில்லை. விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்தவும் இல்லை.

இதுக்குறித்து வக்கீல் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டார். இந்த மனு விசாரணையின்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி..), பத்திரப்பதிவுத்துறை மூத்த அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல்.

நீதிபதி ஆர்.மகாதேவன்.

நீதிபதி ஆர்.மகாதேவன்.

list_new2

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு 09.09.2016 அன்று விசாரணைக்கு வந்த போது சி.எம்.டி.., பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:–

3 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாமல் இருக்கும் விளைநிலங்களை வீட்டு மனைகளாகவோ, வேறு பயன்பாட்டிற்காகவோ மாற்றுவது தொடர்பாக எந்த சட்டமும், விதிகளும் வகுக்கப்படவில்லை. ஆனால், ஒரு விளைநிலத்தில் 5 சதவீத இடத்துக்கு மட்டும் சில அனுமதிகளை கோரி, மீதமுள்ள 95 சதவீத இடத்தை முறைகேடாக வீட்டு மனைகளாக மாற்றவிடுகின்றனர். சென்னையில் 80 சதவீதமாக இருந்த விளைநிலங்கள், தற்போது 15 சதவீதமாக சுருங்கிவிட்டது.

ஆனால் பத்திரப்பதிவுத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், ‘பத்திரப்பதிவின்போது, முறையான வீட்டு மனைகள் தானா? என்பதையெல்லாம் சரிபார்க்கவோ, முறையான வீட்டு மனைகள் இல்லை என்று கூறி, பத்திரப்பதிவு செய்ய பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மறுக்கவோ முடியாதுஎன்று வாதிட்டார்.

ஆனால், ஒரு நிலத்தை பத்திரப்பதிவு செய்யும்போது அதன் எல்லைகளை குறிக்க வேண்டும். அங்கு சாலைகள் உள்ளதா? முறையான அங்கீகாரம் பெற்ற நிலம்தானா? உள்ளிட்டவைகளை பத்திரப் பதிவில் குறிப்பிடவேண்டும். இவையெல்லாம் முறையாக உள்ளதா? என்பதை அதிகாரிகளும் சரி பார்க்கவேண்டும்.

ஒருவேளை அங்கீகாரம் பெறாத நிலத்தை பத்திரப்பதிவு செய்தால், அந்த பத்திரப்பதிவே செல்லாதது ஆகிவிடும். எனவே, விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி, அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது, அந்த நிலத்தையோ அல்லது அந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தையோ பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் எக்காரணம் கொண்டும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது. அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கின்றோம்.

இந்த தடை உத்தரவு குறித்து, அனைத்து பத்திரப்பதிவு அலுவலக அதிகாரிகளுக்கும், பத்திரப்பதிவுத்துறை (.ஜி.) தலைவர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 21–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

  -டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com