நாகர்கோவிலைச் சேர்ந்த பி.சிவகுமார் என்பவர், கர்நாடகத்தில் போராட்டக்காரர்களை ஒடுக்கவும், கலவரக்காரர்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதியிடம் மனு அளித்ததோடு, இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று (15.09.2016) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், போராட்டத்தில் வன்முறையை ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது. வன்முறையில் ஈடுபடுவோர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் அமைதியை நிலைநாட்ட வேண்டும். பொதுச் சொத்துக்களை தீ வைத்து எரித்தது கண்டனத்துக்கு உரியது. போராட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்று கருத்து தெரிவிதுள்ளனர்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com