“தமிழகம் காவிரி நீர் கேட்டு புலம்புவதை விட்டு விட்டு, கடல் நீரை சுத்தீகரிப்பு செய்து அதனை குடிப்பதற்கும், விவசாயத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று தனது “ட்விட்டர்” பக்கத்தில், தமிழன துரோகி சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்து இருந்தார்.
இதுக்குறித்து நமது “உள்ளாட்சித் தகவல்” இணைய ஊடகத்தில் 09.09.2016 அன்று ஆதாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில், காவிரி விவகாரத்தில் இரு மாநில மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த சுப்ரமணியன் சுவாமி மீது தேச துரோக வழக்கு தொடர வலியுறுத்தி, சேலம் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர் பிரவீனா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், பெண் வழக்கறிஞர் பிரவீனா தாக்கல் செய்துள்ள மனுவில், சுப்ரமணியன் சுவாமி தனது “ட்விட்டர்” பக்கத்தில் தமிழகம் காவிரி நீருக்காக ஏன் கூக்குரல் எழுப்பி வருகிறது எனவும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சுப்ரமணியன் சுவாமியின் இந்த கருத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் விதத்திலும், இரு மாநில மக்களிடையே மோதலைத் தூண்டும் விதத்திலும் இருப்பதாகவும், அந்த மனுவில் பிரவீனா குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com