தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, பாரத பிரதமர் நரேந்திர மோதிக்கு இன்று அனுப்பியுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில்,
பிரதமர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நாட்டுக்கும், மக்களுக்கும் சேவையாற்ற எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டுமென பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சிகரமான தங்களது பிறந்த நாளில், வருங்காலம் மிகச் சிறப்பாக அமைய தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோதி நல்ல ஆரோக்கியத்துடனும், உடல் வலிமையோடும் நாட்டுக்கும், மக்களுக்கும் சேவையாற்ற நீண்டகாலம் வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாகவும் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-எஸ்.சதீஸ் சர்மா.