ஏர்செல் – மேக்சிஸ் வழக்கை தில்லி சிபிஐ நீதிமன்றமே தொடர்ந்து விசாரிக்கும்! மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி!-சிறப்பு நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.

DAYA-KALA

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி.

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி.

2ஜி வழக்குடன் ஏர்செல்மேக்சிஸ் வழக்கை சிபிஐ சேர்த்து விசாரிக்கக் கூடாது என்று வலியுறுத்தி மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

2ஜி வழக்குடன் ஏர்செல்மேக்சிஸ் வழக்கையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. ஆனால், 2ஜி வழக்குக்கும், ஏர்செல்மேக்சிஸ் வழக்குக்கும் தொடர்பு இல்லை என்பது தயாநிதிகலாநிதி மாறன் தரப்பு வாதம்.

எனவே, 2ஜி வழக்குடன் ஏர்செல் – மேக்சிஸ் வழக்குக்கு தொடர்பு இல்லை என்பதால், அதனை வேறு நீதிமன்றத்தில் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி  மாறன் தரப்பில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி .பி. சைனி, ஏர்செல்மேக்சிஸ் வழக்கு 2ஜி வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும் எனவும், ஏர்செல்மேக்சிஸ் வழக்கை தில்லி சிபிஐ நீதிமன்றமே தொடர்ந்து விசாரிக்கும் எனவும் உத்தரவிட்டு, மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com