மத்திய நிதியமைச்சர் பதவியில் என்னால் சிறப்பாக செயல்பட முடியும்!- அருண் ஜெட்லியை வம்புக்கு இழுக்கும் சுப்பிரமணியன் சுவாமி!

subramanian-swami

டில்லியில் ‘இந்தியா டுடே’ பத்திரிகை சார்பில் “மைண்ட் ராக்ஸ்” என்ற நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அசாதுடின் ஓவாய்சி ஆகிய இருவரும் விவாதத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, நிதியமைச்சர் பதவியில் அருண் ஜெட்லியை விட, தன்னால் சிறப்பாக செயல்பட முடியும். ஏனென்றால், நான் ஒரு பொருளாதார நிபுணர். அவர் (அருண் ஜெட்லி) ஒரு வழக்கறிஞர். அப்படியிருக்கும் போது அவரால் எப்படி என்னை விட சிறப்பாக செயல்பட முடியும்? அவரை விட சிறந்த நிதியமைச்சராக என்னால் செயல்பட முடியும் என சுப்பிரமணியன் சுவாமி வெளிப்படையாக அறிவித்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை வம்புக்கு இழுத்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும், சுப்பிரமணியன் சுவாமிக்கும் ஏற்கனவே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பகிரங்க அறிவிப்பு, பிரதமர் நரேந்திர மோதிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆட்சி, அதிகாரத்தில் அத்துமீறி தலையிட்டு அரசாங்கத்தை  தொடர்ந்து அவமானப்படுத்தி வரும் சுப்பிரமணியன் சுவாமி மீது, பிரதமர் நரேந்திர மோதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லையென்றால், பிரதமர் நரேந்திர மோதியின் முழு சம்மதத்தோடுதான் சுப்பிரமணியன் சுவாமி இப்படி நடந்து கொள்கிறார் என்று நாட்டு மக்கள் புரிந்துக் கொள்வார்கள்.

மேலும், நரேந்திர மோதியை விட, நான் தான் அதிகம் படித்திருக்கிறேன். உலக தலைவர்கள் மத்தியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச புரோக்கராக செயலாற்றிய பொருளாதார நிபுணத்துவமும், அரசியல் அனுபவமும் எனக்கு மட்டும்தான் இருக்கிறது. அதனால்தான் எந்த பதவியிலும்  இல்லாத எனக்கு, அரசு  பங்களாவும்,  24 மணி நேரமும் இசட் பிரிவு பாதுகாப்பும், இந்திய மக்கள் வரிப்பணத்தில் வழங்கப்படுகிறது.

எனவே, பிரதமர் பதவியில் நரேந்திர மோதியை விட, என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று, சுப்பிரமணியன் சுவாமி விரைவில் அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com