காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 5–ந் தேதி, தமிழ்நாட்டுக்கு செப்டம்பர் 16–ந் தேதி வரை வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து, கர்நாடக தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம், 20-ம் தேதி வரை தண்ணீர் விட வேண்டும் என்று கடந்த 12-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
காவிரியில் உடனடியாக 50 டிஎம்சி தண்ணீர் திறக்கக்கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை இன்று (20.09.2016) விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்காதது ஏன்? இத்தனை காலம் மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? என்று தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.
அதோடு, காவிரி விவகாரத்தில் மேற்பர்வை குழுவை தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்கள் எதிர்ப்பதால் மேலாண்மை வாரியமே முடிவு என்றும் தங்களது கருத்தை தெரிவித்தனர். காவிரி மேலாண்மை வாரியத்தை நான்கு வார காலத்துக்குள் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு காலக்கெடு விதித்துள்ளனர்.
மேலும், செப்டம்பர் 27-ம் தேதி வரை கர்நாடக அரசு காவிரியில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்துக்குத் திறந்து விட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com