தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா வெளி நாட்டுக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை: அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் குழு தகவல்.

Jayalalithaaapollo.drsapollo

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் குழு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

முதல்வர் ஜெ.ஜெயலலிதா, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள  அப்போலா மருத்துவமனையில் 22-09-2016 அன்று அனுமதிக்கப்பட்டார்.  அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைவு இருந்தது.  அவருக்கு உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்டது. மறுநாளே அதாவது, 23-09-2016 அன்றே காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. முதல்வர் வழக்கமான உணவை எடுத்து வருகிறார். அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.

தேவைப்படும் நேரத்தில் உரிய மருந்துகள் தரப்படுகின்றன. மருத்துவ நெறிமுறைப்படி உரிய ஆய்வுகள், சோதனைகள் மீண்டும் காய்ச்சல் ஏற்படாமல் இருக்க  மேற்கொள்ளப்படுகின்றன. முதல்வர் தொடர்ந்து வழக்கமான உணவை எடுத்து வருகிறார். இதற்கிடையே, முதல்வரின் உடல் நிலை குறித்து தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில்  வெளியாகியுள்ளன. சிகிச்சைக்காக அவர் வெளிநாடு செல்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் முற்றிலும் தவறானது ஆதாரமற்றது. முதல்வர் வெளி நாட்டுக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையால் முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார்.  அவர் மேலும் சில நாட்கள் ஓய்வில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர் ஒரு சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அவர் விரைவில்  தனது வழக்கமான அலுவலக பணிகளை மேற்கொள்வார். இவ்வாறு அப்போலா மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com