சுய விளம்பரத்திற்காக நீதிமன்றத்தை பயன்படுத்தக்கூடாது! -டிராபிக் ராமசாமிக்கு நீதிபதிகள் எச்சரிக்கை.  

traffic-ramaswamy

தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட தமிழக தலைமை செயலாளர், உள்துறைச் செயலாளர், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில், விளம்பர பிரியர் டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

மேலும், தமிழகத்திற்கு தற்காலிக முதலமைச்சர் ஒருவரை நியமிக்கவும் உத்தரவிடவேண்டும் என்றும் அம்மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று (06.10.2016) தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உடல் நலம் குறித்து அறிக்கைக் கோரிய டிராபிக் ராமசாமி வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது பொதுநல வழக்கு அல்ல என்றும், சுய விளம்பரத்திற்கான வழக்கு எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். சுய விளம்பரத்திற்காக நீதிமன்றத்தை பயன்படுத்தக் கூடாது என டிராபிக் ராமசாமியை நீதிபதிகள் எச்சரித்தனர்.

-ஆர்.மார்ஷல்.