தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ‘முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் முதல்வரின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வந்திருக்கும் மருத்துவர்கள், இங்கு சிகிசிச்சை வழங்கி வரும் மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்து வருகின்றனர் எனவும், சென்னை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெ.ஜெயலலிதா மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவும் அந்த அறிகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com