தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ஆகியோர், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து ஆளுநர் அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், காவிரி நீர் விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி, தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
-கே.பி.சுகுமார்.