தமிழகம், புதுச்சேரி, திரிபுரா, மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 12 தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுச்சேரி நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கும் நவம்பர் 19-ம் தேதியே தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் தேதியை அறிவித்த தலைமைத் தேர்தல் ஆணையம், இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவோர் அக்டோபர் 26-ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த அறிவிப்பில், நவம்பர் 2-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். நவம்பர் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் பரிசீலனை செய்யப்படும். வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை திரும்பப் பெற நவம்பர் 5-ம் தேதி கடைசியாகும்.
அதே போல, நவம்பர் 5-ம் தேதி வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
நவம்பர் 19-ம் தேதி வாக்குப்பதிவும், 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com