தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா உடல் நிலையில் தொடர் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இருதய, சுவாச, நீரிழிவு மற்றும் கிருமி தொற்று நோய் நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆலோசனையின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிசியோதெரபி சிகிச்சையும் முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெ.ஜெயலலிதாவால் நன்கு பேச முடிகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com