மத்திய அரசு BSNL -க்கு சொந்தமான டவர் நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் விதத்தில் உள்ளது. துணை டவர் (SUB TOWER) என்று சொல்லி ஆரம்பத்தில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் உள்ளே நுழைந்து பிறகு அனைவரையும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்துவது அரசு ஆணைக்கு புறம்பானது. இதன் விளைவாக BSNL ஊழியர்கள் பணியை இழக்கும் நிலை உருவாகி உள்ளது. இது Telecom Regulatory Authority of India (TRAI) -ன் விதிமுறைக்கு புறம்பானது.
வருவாய் இல்லாத நிருவனங்களை மூடுமாறு ஆளும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், பாரத பிரதமர் நரேந்திர மோதி 4G Relaince Jio நிறுவனத்திற்கு ஆதரவாக தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்கிறார். இதனால்தான் BSNL -க்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. BSNL- க்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால் பொதுமக்கள் சேவை தடைப்பட்டுள்ளது.
இதை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி BSNL ஊழயர் சங்க சார்பில் 27.10.2016 அன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் கிளை தலைவர் T. மதியழகன், செயலாளர் B. மாரிமுத்து தலைமையில், மாவட்ட துணைசெயலாளர் பாண்டியன் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் S.M. சேகர், பொருளாளர் K.பெருமாள் மற்றும் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
– ச. ரஜினிகாந்த்.
– மு. ராமராஜ்.