காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பென்ஷன் உள்ளிட்ட நிலுவை தொகைகளை உடனடியாக கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:- “நமது முன்னாள் ராணுவ வீரர்களை திருப்திபடுத்தும் வகையில் ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராகவோ அல்லது அதே போன்றோ பென்ஷன் தொகைகள் வழங்கப்பட வேண்டும்.
7-வது சம்பள கமிஷனில் உள்ள முரண்பாடுகள் விரைவில் களையப்பட வேண்டும். நாம் தீபாவளியை கொண்டாடும் இந்த சமயத்தில், இது போன்ற அறிவிப்புக்கள் நமது வீரர்களுக்கு நமது நன்றி உணர்வை சொல்லிலும், செயலிலும் காட்டுவதாக இருக்கும்” இவ்வாறு ராகுல் காந்தி தனது கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com