இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் தாயகம் திரும்பினர்!

tn.fishers releasetn.fishers release 2tn.fishers release 1புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டிணத்தைச் சேர்ந்த தங்கமணி, பிரதீப், அருண், சண்முகவேல், கோபு ஆகிய 5 மீனவர்கள், கடந்த மாதம் 4-ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன்காரணமாக மீனவர்கள் 5 பேரும் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மீனவர்கள் 5 பேரும், கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனையடுத்து, காரைக்கால் துறைமுகத்திற்கு நேற்று வந்த மீனவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். பின்னர், உணவு, உடை உள்ளிட்டவை அளிக்கப்பட்டு, தமிழக அரசு செலவில் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

-ஆர்.மார்ஷல்.