500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நவம்பர் 15-ம் தேதி விசாரணை!  

scmid

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சங்கம்லால் பாண்டே, விவேக் நாராயண் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

இந்த மனு மீதான விசாரணை நவம்பர் 15-ம் தேதிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மத்திய அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

-எஸ்.சதிஸ் சர்மா.