500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்நிலையில், ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கச் செல்லும் மக்கள், பெரும்பாலான ஏ.டி.எம்.கள் இன்னும் திறக்கப்படாமலேயே இருப்பது கண்டு ஏமாற்றம் அடைகின்றனர்.
வங்கி இருக்கும் வளாகத்திலேயே அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம் மையங்களில் மட்டுமே பணம் நிரப்பப்பட்டு, பொதுமக்கள் அதிகபட்சமாக 2 ஆயிரம் ரூபாய் எடுக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
அதுவும், ஒவ்வொரு வங்கியும், குறிப்பிட்ட தொகையை மட்டுமே வங்கி ஏ.டி.எம்.களில் வைக்கின்றன. இதனால், 50 முதல் 100 வாடிக்கையாளர்கள் மட்டுமே வங்கி ஏ.டி.எம்.களை பயன்படுத்தும் நிலை உள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
-ஆர்.அருண்கேசவன்.
-எம்.சுந்தரம்.