அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், சுங்கச்சாவடிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான அறிவிப்பு இன்று இரவுடன் காலாவதியாக இருந்த நிலையில் அது மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த் தாஸ் இன்று காலை தில்லியில் அறிவித்தார்.
இதன் மூலம் மின்சார கட்டணம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரிகள் உள்ளிட்டவற்றை பழைய 500, 1000 ரூபாய் ஆக செலுத்தவும் 10 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வங்கி தொடர்பாளர்களின் பணக் கையிருப்பு வரம்பு 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு பணம் கிடைப்பது எளிதாகும் என்று கூறினார். நடப்புக் கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் ஒரே நேரத்தில் 50 ஆயிரம் ரூபாயை வங்கியில் இருந்து எடுக்கவும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், ஏடிஎம்.,களில் நாள்தோறும் எடுத்துக் கொள்ளும் தொகையின் அளவு ரூ.2000-லிருந்து ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான அளவும் ரூ.4000 – லிருந்து ரூ.4500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வாரத்திற்கு வங்கிகளில் இருந்து எடுத்துக் கொள்ளும் பணத்தின் அளவையும் ரூ.20,000 –லிருந்து ரூ.24,000 ஆக உயர்த்துமாறு ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்வதற்கு மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு வங்கிகளில் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com