சர்வதேச அளவில் சுவிட்சர்லாந்து பணக்கார நாடுகளில் ஒன்றாக திகழ்ந்தாலும் அந்நாட்டிலும் வறுமை கோட்டிற்கு கீழ் இன்றளவும் மக்கள் வசித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுவிஸ் நாட்டை சேர்ந்த Caritas என்ற தொண்டு நிறுவனம் அண்மையில் நாடு முழுவதும் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இதில், கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் ஒவ்வொரு 20 வாலிபர்களில் ஒருவர் வறுமையில் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
அதாவது, நாடு முழுவதும் 18 வயதிற்கு கீழ் உள்ள இளம்பெண்கள் மற்றும் வாலிபர்களில் 73,000 பேர் வறுமையில் இருந்துள்ளனர்.
இதே நிலை கடந்த 2013-ம் ஆண்டு 55,000 எனவும், 2007-ம் ஆண்டு 1,50,000 ஆகவும் இருந்துள்ளது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெற்றோர்களுக்கு வேலை இல்லாமல் இருந்ததே இதற்கு முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.
இவர்களில் 30 சதவிகிதத்தினர் வீட்டு செலவுகள் தொடர்பான வறுமையிலும், 70 சதவிகிதனர் குறைவான வருமான தொடர்பான வறுமையிலும் இருந்துள்ளனர். குறிப்பாக, தந்தை அல்லது தாயுடன் தனியாக வசிக்கும் இளம்பெண்கள் மற்றும் வாலிபர்களே அதிகளவில் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளது இந்த ஆயிவில் தெரியவந்துள்ளது.
இது போன்ற ஒரு சூழலில் பெற்றோர்கள் தங்களுடைய தேவைகளை தியாகம் செய்துவிட்டு தங்களுடைய பிள்ளைகளின் தேவைகளை மட்டுமே முக்கியமானதாக கருதி அவற்றை பூர்த்தி செய்ய போராடியுள்ளனர்.
ஆய்வில் வெளியான இப்புள்ளி விபரங்களை தொடர்ந்து வறுமையை எதிர்த்து போராட வேண்டும் என சுவிஸ் அரசுக்கு Caritas தொண்டு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com