பஞ்சாப் மாநிலம், பதின்டாவில் ஏய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி இன்று கலந்துக் கொண்டார்.
சமூக உள்கட்டமைப்பு, ஒவ்வொரு தேசத்திற்கும் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. நல்ல உயர்தர பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் நமக்கு அவசியமானது. அப்போது பிரதமர் நரேந்திர மோதி பாகிஸ்தான் குறித்தும் பேசினார்.
மீண்டும் பாகிஸ்தான் மக்களிடம் மீண்டும் பேச விரும்புகின்றேன். பாகிஸ்தான் மக்கள் அந்நாட்டு ஆட்சியாளர்களிடம் பேசவேண்டும். இந்தியாவிற்கு எதிராக போரிட வேண்டுமா? அல்லது ஊழல், கருப்பு பணம் மற்றும் ஏழ்மைக்கு எதிராக போராட வேண்டுமா? என்பது தொடர்பாக அவர்கள் முடிவுசெய்ய வேண்டும்.
பெஷாவரில் பள்ளியின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, ஒவ்வொரு இந்தியரும் பெரும் கவலை அடைந்தனர். பாகிஸ்தான் மக்கள் அவர்களின் ஆட்சியாளர்களிடம் சொல்ல வேண்டும், ஊழல் மற்றும் கள்ள நோட்டிற்கு எதிராக போராடவேண்டும் என்று, இவ்வாறு பிரதமர் நரேந்திர மோதி பேசினார்.
-எஸ்.சதிஸ் சர்மா.