பஞ்சாப் மாநிலம் நபாவில் உள்ள மத்திய சிறையில் இன்று (27.11.2016) காலை ஆயுதம் தாங்கிய 10 பேர்கள் கொண்ட தீவிரவாத கும்பல் அதிரடி தாக்குதல் நடத்தி, சிறையில் இருந்த காலிஸ்தான் விடுதலைப்படை இயக்கத் தலைவர் ஹர்மீந்தர் சிங் மின்டு மற்றும் குர்பிரீத் சிங், விக்கி கோந்த்ரா, நிதின் தியோ விக்ராம்ஜீத் சிங் ஆகிய கூலிப்படை தலைவர்களையும் மீட்டு சென்றுள்ளனர்.
தீவிரவாதிகள் தாக்குதலுக்கு, சிறைத்துறை அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து நபா சிறை சாலை கண்காணிப்பாளர் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் மற்றும் தப்பித்தல் சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. வாகனப் போக்குவரத்து சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
பஞ்சாப் மாநில குற்ற ஆவணக் குறிப்புகள்:
-எஸ்.சதிஸ் சர்மா.