கணக்கில் காட்டாத பணத்துக்கு 73 சதவீதம் அபராதம் விதிக்கும் வகையிலான புதிய சட்டதிருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்ய்யப்பட்டது.
நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு வங்கிகளில் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டால் வருமானவரித் துறை விசாரணை நடத்தும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் கணக்கில் காட்டாத பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களுக்கு கூடுதல் வரி மற்றும் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் வகையில் வருமான வரி சட்டதிருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த திருத்தப்பட்ட வருமானவரி மசோதாவின் படி, கணக்கு காட்டாத வருமானத்திற்கு 30 சதவீதம் வரியும், 10 சதவீதம் அபராதமும், 33 சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்பட உள்ளது. ஆக 73 சதவீத வரை அபராதம் விதிக்கப்படும் என முன்மொழியப்பட்டுள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com