திரையரங்குகளில் கட்டாயம் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கு ஒன்றில் உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதிலும் திரையரங்குகளில் படம் துவங்குவதற்கு முன் தேசியகீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும். தேசியகீதம் இசைக்கப்படும் போது திரையில் தேசிய கொடி காட்டப்பட வேண்டும். தேசியகீதம் இசைக்கப்படும் போது திரையரங்குகளில் உள்ள அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். எந்த காரணத்திற்காகவும், தேசிய கீதத்தின் சுருக்க வடிவம் இசைக்கப்படக் கூடாது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை கட்டாயம் நிறைவேற்றுவோம். இந்த உத்தரவை நிறைவேற்றுவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
தியேட்டர்களில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்யப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com