வங்கி கணக்கு துவங்குவதற்கு ஆதார் எண் கட்டாயம் இல்லை என மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ்குமார் கேங்வார் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த சந்தோஷ்குமார், வங்கி கணக்கு துவங்குவதற்கோ அல்லது பணபரிவர்த்தனைக்கோ ஆதார் எண் கட்டாயமல்ல. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 6 ஆவணங்களில் ஆதார் எண்ணும் ஒன்று. எனவே, வங்கி நடவடிக்கைகளை பெறவும் ஆதார் எண் கட்டாயம் இல்லை என தெரிவித்துள்ளார்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com