தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா காலமானதாக தவறான செய்தி வெளியானதை அடுத்து அதிமுக தொண்டர்கள் பல இடங்களில் கலவரத்தில் ஈடுபட்டனர். உடனே, அதிமுக கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் காலமானதாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு கூடுதல் மருத்துவர்கள் தீவீர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவர் உடல் நிலை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.