‘வர்தா’ புயல்: வட தமிழகத்தில் கனமழை பெய்யும்…!

Vardha

வங்க கடலில் உருவாகியவர்தாபுயல் சென்னை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால் வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.

வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு மற்றும்  வடகிழக்கே 440 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.

தற்போது சென்னையில் இருந்து 370 கிலோ மீட்டர் தொலைவில்வர்தாபுயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் வடக்கு தமிழ்நாடுதெற்கு ஆந்திரா இடையே சென்னை அருகே நாளை திங்கள்கிழமை பிற்பகல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் எண்ணூர், காசிமேடு, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அடையார், பட்டினம்பாக்கம், மைலாப்பூர், மற்றும் வடபழனி, அசோக்நகர், உச்சிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இன்று மாலை முதல் இரு தினங்களுக்கு வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கூறியுள்ளார்.

வர்தாபுயல் நாளை சென்னை அருகே கரையை கடக்க உள்ளதால் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். எனவே, மீனவர்கள் அடுத்த 48 மணிநேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களில் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 8-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

-கே.பி.சுகுமார்.