மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் குறித்து ஏப்ரல் 25, 2016 – அன்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிகாரப்பூர்வமாக ஜெ.ஜெயலலிதா கையெழுத்திட்டு சமர்பித்திருக்கிறார். அந்த உறுதிமொழி ஆவணத்தின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
மேலும், இந்த சொத்துக்களின் தற்போதைய நிலை என்ன? ஜெ.ஜெயலலிதாவின் பெயரிலேதான் இருக்கிறதா? (அல்லது) கடந்த 7 மாதங்களில் இவையெல்லாம் வேறு யாரு பெயருக்காவது மாற்றப்பட்டுள்ளதா?-என்ற விபரங்களை எமது “நிருபர்கள் குழு” களத்தில் ஆராய்ந்து வருகிறது. உரிய ஆவணங்களும், ஆதாரங்களும் கிடைத்தவுடன் அவற்றையும் நமது வாசகர்களுடன் பகிர்ந்துக்கொள்வோம்.
அதுவரை சமூக விரோதிகளின் ஆதாரமற்ற செய்திகளை அலட்சியப்படுத்தி, அமைதி காக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
என்றும் தோழமையுடன்,
டாக்டர்.துரை பெஞ்சமின்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்.