தி.மு.க., தலைவர் மு.கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் நேற்று இரவு 11 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளது. அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல் நிலை சீராக உள்ளது என்று, காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் எஸ்.அரவிந்தன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து இன்று (16-ம் தேதி) மதியம் 1 மணியளவில் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சுவாசக் கோளாறு மற்றும் தொண்டை, நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. மூச்சுத் திணறல் பிரச்னையை சரி செய்ய அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு, மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்’ என காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் எஸ்.அரவிந்தன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.