பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.21-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.79-ம் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளன.
இதையடுத்து, தில்லியில் அந்த மாநில அரசு விதிக்கும் வரிகளுடன் சேர்த்து, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.68.94-க்கு (முந்தைய விலை ரூ.66.10) விற்கப்படுகிறது. இதேபோல், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.56.68-ஆக (முந்தைய விலை ரூ.54.57) உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.68.41-ஆகவும் (முந்தைய விலை ரூ.65.58), டீசலின் விலை லிட்டருக்கு ரூ.58.28-ஆகவும் (முந்தைய விலை ரூ.56.10) உயர்த்தப்பட்டுள்ளன.
-கே.பி.சுகுமார்.