பிரதமர் நரேந்திர மோதியை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது 184 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை பிரதமரிடம் அவர் கொடுத்தார்.
அதில் வர்தா புயலுக்கு நிவாரணமாக 22,000 கோடி ரூபாய் இழப்பீடு தேவை எனவும் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு பாரதரத்னா விருது, மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் அவரது சிலை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவே சென்னை திரும்புகிறார்.
-ஆர்.மார்ஷல்.