தமிழக அரசின் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் சென்னையில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் தொழிலபதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து ரூ.120 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில் சேகர் ரெட்டியுடன், ராம் மோகன் ராவிற்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து இன்று காலை 8.30 மணியளவில், ராம் மோகன் ராவின் அண்ணாநகர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
-கே.பி.சுகுமார்.