மக்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.
ஆனால், கடந்த 19-ஆம் தேதி அன்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றில், ரூபாய் 5000 அல்லது அதற்கு மேல் வங்கிகளில் டிசம்பர் 30-ஆம் தேதி வரை ஒரே ஒருமுறை மட்டுமே டெபாசிட் செய்யலாம் என்றும், அவ்வாறு டெபாசிட் செய்பவர்கள் கூட குறைந்த பட்சம் இரண்டு வங்கி அதிகாரிகள் முன்னிலையில் ஏன் அந்த தொகை தாமதமாக டெபாசிட் செய்யப்படுகிறது என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் கூறப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் டிசம்பர்-19-ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொள்வதாக இந்திய ரிசர்வ் வங்கி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.