தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்! -உத்தரவின் உண்மை நகல்.

கிரிஜா வைத்தியநாதன்.

கிரிஜா வைத்தியநாதன்.

C_Users_UTL_Desktop_8100PDIPR-Posting-ChiefSecretary-Date-22.12.2016

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதனை, ஆளுநர் வித்யாசாகர் ராவ் நியமித்திருப்பதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த கிரிஜா வைத்தியநாதன், நில நிர்வாகத் துறை ஆணையராக பதவி வகித்தார்.

தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் கண்காணிப்பு ஆணையர் பதவிகளையும் அவர் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, கிரிஜா வைத்தியநாதன், புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com