தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனம் செல்லாது!-சென்னை உயர் நீதிமன்ற  உத்தரவின் உண்மை நகல்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல்.

நீதிபதி ஆர்.மகாதேவன்.

நீதிபதி ஆர்.மகாதேவன்.

tnpscதமிழக அரசால் நியமிக்கப்பட்ட, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (TNPSC) உறுப்பினர்கள் 11 பேரது நியமனமும் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ்.இளங்கோவன்.

திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ்.இளங்கோவன்.

புதிய தமிழக கட்சியின் நிறுவனர் Dr.கிருஷ்ணசாமி.

புதிய தமிழக கட்சியின் நிறுவனர் Dr.கிருஷ்ணசாமி.

பா.ம.க. வழக்கறிஞர் பாலு.

பா.ம.க. வழக்கறிஞர் பாலு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து தி.மு.க செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், புதிய தமிழக கட்சியின் நிறுவனர் Dr.கிருஷ்ணசாமி, பா.ம.க. வழக்கறிஞர் பாலு ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

உரிய விதிகளைப் பின்பற்றாமல் நியமனங்கள் நடந்ததாகக் கூறி நியமன ஆணையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் கூறும்போது, “டிஎன்பிஎஸ்சி.யின் 11 பேரது நியமனமும் முறைப்படி நடக்கவில்லை. தகுதி இல்லாதவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, நியமன ஆணை ரத்து செய்யப்படுகிறது” என்றனர்.

டிஎன்பிஎஸ்சிக்கு கடந்த பிப்ரவரியில் எம்.ராஜாராம் ஐஏஎஸ், வழக்கறிஞர்கள் ஆர்.பிரதாப் குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், ஏ.வி.பாலுசாமி, எம்.மாடசாமி, வி.ராமமூர்த்தி, பொறியாளர்கள் பி.கிருஷ்ணகுமார், ஏ.சுப்பிரமணியன், என்.பி.புண்ணியமூர்த்தி ஆகியோர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

2016-சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர் இந்த நியமனம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com