தென் ஆப்ரிக்காவில் இராட்சத எலிகள் மூன்று மாத பெண் குழந்தையை உயிரோடு தின்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோகன்னஸ்பர்க் (Johannesburg), கேட்லி ஹான்க் (Katlehong) நகரத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் 26 வயதான தாயை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் 26 வயதான பெண், தினமும் குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு மது விடுதிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று பெண் மது விடுதிக்கு சென்று அதிகாலை வீடு திரும்பிய போது, குழந்தை உடல் பாகங்களின்றி இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளது.
விசாரணையில் இராட்சத எலிகள் குழந்தையை கொடூரமாக கடித்து தின்றுள்ளது தெரியவந்துள்ளது. இதில், அந்த குழந்தை வலியால் துடி துடித்து உயிரிழந்துள்ளது.
தென் ஆப்பிரக்காவில் சுமார் 3 ஆடி உள்ள இராட்சத எலிகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. குழந்தை கவனிப்பாரற்று விட்ட தாயை போலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
-ஆர்.மார்ஷல்.