தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி வீடு திரும்பினார்.

mkkmc

காவேரி மருத்துவமனையில் இருந்து திமுக தலைவர் மு.கருணாநிதி இன்று (23.12.2016) மாலை வீடு திரும்பினார்.

மூச்சுத் திணறல் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மு.கருணாநிதிக்கு கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

நுரையீரலில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மு.கருணாநிதிக்கு ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு டிரக்கியோஸ்டோமி சிகிச்சை இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மு.கருணாநிதி வீட்டிலேயே முழு ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், மு.கருணாநிதி பூரணமாக குணமடைந்ததை அடுத்து அவர் வீடு திரும்பியுள்ளார். அவருக்கு முழு ஓய்வு தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 -கே.பி.சுகுமார்.