இலங்கை வவுனியாவில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிற்கு நினைவஞ்சலி!

sl news

sl news.1மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இலங்கை வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த அஞ்சலி நிகழ்வினை வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்வில் ஜெ.ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

மேற்படி, அஞ்சலி நிகழ்வில் மாந்தை கிழக்கின் முன்னாள் பிரதேச சபை தலைவர் தனிநாயகம், பிரதேச சபையின் உப தலைவர் செந்தூரன் மற்றும் பொது அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

-வினித்.