சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, ஏற்காடு காவல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. ஏற்காடு காவல் ஆய்வாளர் அருள் முருகன் தலைமையில், ஏற்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்ட பேரணி, பள்ளி வளாகத்தில் துவங்கி, மான் பூங்கா, படகு இல்லம், அண்ணா சிலை, அண்ணா பூங்கா, ஒண்டிக்கடை உள்ளிட்ட பகுதிகளை கடந்து மீண்டும் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது.
பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள், ஹெல்மெட் அணிய வேண்டும், மிதமான வேகத்தில் சாலையில் வாகனத்தை ஓட்ட வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களும், காவல் உதவி ஆய்வாளர் ஹரிகரன் உள்ளிட்ட காவல் துறையினரும் கலந்துக்கொண்டனர்.
–நவீன் குமார்.