தி.மு.க. கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

MK STALIN 7MK STALIN 6MK STALIN.1 MK STALIN MK STALIN4MK STALIN2 MK STALIN3சென்னைஅண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் செயல் தலைவராக மு..ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திமுக கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மு..ஸ்டாலின், திமுக கட்சித் தலைவர் மு. கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து, வாழ்த்து பெற்றார்.

பொதுச்செயலாளர் . அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மு.. ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திமுக பொதுக்குழு கூட்டத்தில் பொருளாளர் மு..ஸ்டாலின் தற்போது செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுகவின் விதி 18-ல் திருத்தம் செய்யப்பட்டு மு..ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டார். விதியின்படி தலைவருக்கான அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவருக்கு உண்டு. இந்த தீர்மானத்தை .அன்பழகன் முன்மொழிய துரைமுருகன் வழிமொழிந்தார்.

மேலும், திமுக பொருளாளர் பதவியிலும் மு..ஸ்டாலின் தொடர்ந்து நீடிப்பார் எனவும் கூறப்படுகிறது. செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு..ஸ்டாலினுக்கு பொதுக்குழுவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

 -கே.பி.சுகுமார்.