பொங்கல் விடுமுறை அனைத்துப் பகுதிகளிலும் கட்டாயம் அல்ல என மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே பொங்கல் விடுமுறை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், கட்டாய விடுமுறை தினத்திலிருந்து பொங்கல் விடுமுறை நீக்கப்பட்டுள்ளது. மேலும், உயரதிகாரி விடுமுறை அளிக்க மறுத்தால் பணிக்கு கட்டாயம் வரவேண்டும் என்றும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழர் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜாதி, மத, பேதமின்றி கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் தின விடுமுறைக்கு எதிரான இந்த அறிவிப்பால் தமிழகம் மட்டுமல்லாது, உலக தமிழர்கள் அனைவரும் மத்திய அரசு மீதும் மிகுந்த அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
-கே.பி.சுகுமார்.