பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி தினமும் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
இதேபோல் நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தற்போது வாரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. அது இனி ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.