ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது; அதற்கான விதிமுறைகள் முழு விபரம்!

tn-govttn.governor tn.governor2 tn.order tn.order2 tn.order3 tn.order4 tn.order5 tn.order6

ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன.

அதில், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் குறித்த விவரத்தை அளித்து மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் தனிநபர், அமைப்பு அல்லது குழு, மாவட்ட ஆட்சியரிடம் முன்கூட்டி விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சியரின் அனுமதி கிடைத்ததும், ஜல்லிக்கட்டு நடைபெறும் நாள், இடம் ஆகியவற்றை அரசு வெளியிடும்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் களத்துக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு 20 நிமிடங்கள் ஓய்வளிக்கப்பட வேண்டும். காளைகள் நிறுத்தப்படும் இடத்தில் அவற்றுக்கு இடையே 60 சதுர அடி அளவில் போதிய இடைவெளி அளிப்பதுடன், பாதுகாப்பாக உணர காளையின் உரிமையாளர் அருகில் இருக்க வேண்டும். காளைகள் நிறுத்தப்படும் இடத்தில் மழை, வெயில் பாதிக்காமல் கூடாரம் அமைத்திருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியின் முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும்.மது உள்ளிட்ட எதையும் காளைகளுக்கு வழங்கப்படாததை உறுதி செய்வதுடன், காளையை அடக்குவோர் 15 மீட்டர் தூரத்திற்கு திமிலை மட்டுமே பிடித்துக் கொண்டு செல்லல வேண்டும். வால் போன்றவற்றை பிடிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை குழு அமைத்து கண்காணிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com